பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வன்னியர் 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டிற்கான ஐந்தாம் கட்ட போராட்டமாக நகராட்சி ஆணையாளரிடம் மனு…
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வன்னியர் 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டிற்கான ஐந்தாம் கட்ட போராட்டமாக நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசு அறிவித்திருந்தார். இதனையொட்டி தென்காசி வடக்கு மாவட்ட பாமக சார்பில் சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளரிடம் மாவட்ட செயலாளர் சீதாராமன் தலைமையில் மாநில இளைஞரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் ராம்குமார் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது. வன்னியர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் . சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் கருத்த பாண்டியன் திருவேங்கடம் மாரிக்கனி கடையநல்லூர் நகர செயலாளர் விஷ்ணுகுமார் ,இசக்கியப்பா ஆனந்த் சங்கரநாராயணன், ஆகியோர் உடன் இருந்தனர்.