தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 5,647 வளர்ச்சித் திட்டப்பணிகள் ரூ.433.87 கோடி மதிப்பீட்டில்…

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் அமைத்துள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நிதிநிலைகள் குறித்து ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு அம்மாவின் அரசு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகள், வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடிப்படை தேவைகள் அனைத்தும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்;புறப் பகுதிகளில் சாலை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் தேவையான நிதி ஓதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுகாதாரமான உகந்த குடிநீரினை முறையாக நாள்தோறும் வழங்குதல் மற்றும் ஊரக பகுதிகளிலுள்ள குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீட்டு வரி செலுத்தும் அனைத்து குடியிருப்புகளுக்கும் முறையான குடிநீர் இணைப்பு வழங்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தேனி மாவட்டத்தில் கடந்த 2016-17 முதல் நடப்பாண்டு வரை மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களான, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 912 பணிகள் ரூ.61.19 கோடி மதிப்பீட்டிலும், கடமலை-மயிலை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 813 பணிகள் ரூ.52.06 கோடி மதிப்பீட்டிலும், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 961 பணிகள் ரூ.84.49 கோடி மதிப்பீட்டிலும், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 948 பணிகள் ரூ.89.00 கோடி மதிப்பீட்டிலும், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 897 பணிகள் ரூ.73.00 கோடி மதிப்பீட்டிலும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 490 பணிகள் ரூ.40.00 கோடி மதிப்பீட்டிலும், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 335 பணிகள் ரூ.13.67 கோடி மதிப்பீட்டிலும், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 291 பணிகள் ரூ.20.52 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 5,647 வளர்ச்சித் திட்டப்பணிகள் ரூ.433.87 கோடி மதிப்பீட்டில்; மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர, மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் 6 நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்வதற்குகென கோரப்பட்ட நிதிகளின் அடிப்படையில், படிப்படியாக விடுவிக்கப்படும் நிதிகளின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப்பகுதிகளிலும் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும், மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் மற்றும் நிதிநிலைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சார்ந்த ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் முன்னதாக கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக இன்றைய தினம் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களது பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் நிதிநிலைகள் குறித்த கோரிக்கையினை மனுக்களாக தெரிவிக்கலாம். அம்மனுக்களின் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களுக்காகவே செயல்படும் அரசாக அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது இதனை கருத்தில் கொண்டு, கிராமப்புற மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்கு தங்களின் பங்களிப்பை முழுமையாக அளித்து, மக்கள் பணியாற்றி முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவர் க.ப்ரிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, செயற்பொறியாளர் எஸ்.கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள் (ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், கடமலை-மயிலை) மற்றும் அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தேனி.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *