திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சேதமடைந்த 581.22.8 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.78,46,578 ஒதுக்கீடு செய்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மழை மற்றும் சூறாவளிக் காற்றினால் தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் அடைந்ததை, வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டு புலத்தணிக்கை செய்து 33 விழுக்காடுக்கு மேல் சேதம் அடைந்த பயிர் சேத விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு பரிந்து செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சேதமடைந்த 581.22.8 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.78,46,578 (ரூபாய் எழுபத்தி எட்டு இலட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து ஐநூற்றி எழுபத்தி எட்டு மட்டும்) ஒதுக்கீடு செய்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மழை மற்றும் சூறாவளிக் காற்றினால் சேதமடைந்த 581.22.8 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு தொடர்புடைய ஸ்ரீரங்கம் வட்டத்தில் 862 விவசாயிகள், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 381, இலால்குடி வட்டத்தில் 113, முசிறி வட்டத்தில் 81, தொட்டியம் வட்டத்தில் 47, துறையூர் வட்டத்தில் 4, திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டத்தில் 1, ஆக மொத்தம் 1489 விவசாயிகளுக்கு சேதமடைந்த தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.78,46,578 நிவாரணத் தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வெளியீடு: