தவறாக நடக்க முயன்ற நபரை தற்காப்பிற்காக கொன்ற பெண் விடுவிப்பு – திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் ஐபிஎஸ் அறிவிப்பு…

Loading

தவறாக நடக்க முயன்ற நபரை தற்காப்பிற்காக கொன்ற பெண் விடுவிப்பு – திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் ஐபிஎஸ் அறிவிப்பு…

தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி.திரு அரவிந்தன் IPS.அவர்கள்….

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச் சென்றார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்தவரும், உறவினருமான அஜித் குமார் (25) என்ற இளைஞர், அவரைப் பின்தொடர்ந்து கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண், இளைஞரிடமிருந்து கத்தியைப் பிடுங்கி, தற்காப்புக்காக அஜித்குமாரைக் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த இளைஞர், சிறிது நேரத்திலேயே இறந்தார். இதைத்தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சம்பவத்தை விவரித்து சரண் அடைந்தார். இளம்பெண் அளித்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தற்காப்புக்காக மட்டுமே அஜித்குமாரை, அவர் கத்தியால் குத்தியதும், அவருக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளம்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302இன் கீழ் பதிவுசெய்த கொலை வழக்கை, ஐபிசி பிரிவு 100 ஆக மாற்றி இவ்வழக்கின் விசாரணை அதிகாரி மேற்படி பெண்ணை விடுவித்தார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *