தமிழகம் பல்வேறு துறைகளில் தேசிய விருது பெற்றுள்ளது ஈரோட்டில் முதல்வர் 2 ஆவது நாளாக பிரச்சாரம்…

Loading

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் நேற்று முந்தினம் பவானி ,அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இரண்டாவது நாளாக நேற்று மாநகர் பகுதியில் முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டார் கருங்கல்பாளையம் காவிரி கரையில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் கே. ஏ .செங்கோட்டையன், கே. சி. கருப்பண்ணன் ,பி.தங்கமணி, எம்.எல்.ஏ.,க்கள் கே .வி. ராமலிங்கம் ,கே .எஸ். தென்னரசு,,வி.பி. சிவசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்களைப் பார்த்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கையசைத்தார் பின்னர் பன்னீர்செல்வம் பார்க் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறைந்த முதலமைச்சர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா ,அண்ணா ,மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் பின்னர் முதலமைச்சர் பொதுமக்கள் மத்தியில் பேசினார்:-
அம்மா மறைவிற்குப் பின்பு நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆகும் ,அம்மா குறிப்பிட்டதுபோல் எனக்கு பின்னால் இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வாழையடி வாழையாக இன்று நாட்டு மக்களுக்கு பாடுபடும் என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டார் மறைந்த எம்ஜிஆர் ,அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள் ,வேண்டும் என்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து அவதூறு பரப்பி வருகிறார், அரசு மீது பழி சுமத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் , அவர்கள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது நமது அரசு மற்றும் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகிறார் அ தி மு க ஆலமரம் போன்றது, எண்ணற்ற திட்டங்கள் அண்ணா திமுக ஆட்சி செய்துள்ளது, ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது அம்மா மினி கிளினிக் ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மினி கிளினிக் 6 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது அங்கு ஒரு மருத்துவர் ,ஒரு செவிலியர், உதவியாளர் இருப்பார்கள் ஏழை எளியோர்களுக்கு தேவையான சிகிச்சை இங்கு அளிக்கப்படும் மேல் சிகிச்சை தேவைப் படுபவர்கள் அரசு மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் நாடே போற்றும் இந்த திட்டத்தை ஒருவர் மட்டும் குறை கூறுகிறார் என்ன குறைபாடை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை வேண்டுமென்றால் அம்மா கிளினிக் டாக்டர்களிடம் சோதனை செய்து கொள்ளலாம் 2000 கிளினிக்குகள் திறந்து இந்த அரசு சாதனை படைத்து உள்ளது . 11 மருத்துவ கல்லூரிகள்

தமிழ்நாட்டில் 41 சதவீதம் மாணவர்கள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர் கடந்த ஆண்டு வெறும் 6 மாணவர்களுக்கு மட்டும் எம் பி பி எஸ்., படிக்க வாய்ப்பு கிடைத்தது நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என் என்பதாலும் அரசு பள்ளியில் படித்தவர் என்பதாலும் அரசு பள்ளி மாணவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும் இதற்காகத் தான் இந்த அரசு 7.5% உள் ஒதுக்கீட்டை சட்டமாக இயற்றி அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தது இதன் மூலம் இந்த ஆண்டிலேயே 313 அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர் மேலும் 11 மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு மேலும் கூடுதலாக 130 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கும் இவர்களுக்கான கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி உள்ளது ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது 1,850 அடுக்கு மாடி வீடு கட்டி முடிக்கப்பட்டு உள்ளது, ஈரோடு அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக ரூ 62 கோடியில் தரம் உயர்த்தி அதற்கான பணிகள் நடந்து வருகிறது, இதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடங்களுக்கான ரூ 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது, பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.250 கோடியில் நடைபெற்று வருகிறது ,தற்போது இரண்டாவது கட்டமாக ரூ 65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது, ஈரோடு மாநகர மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் பூமிக்கு அடியில் மின் கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது,, ரூ 52 கோடி மதிப்பீட்டில் ஜவுளி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் ,ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டமான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் ரூ 454 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது இந்த பணிகள் 98% நடைபெற்று முடிந்துவிட்டது இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் நானே இங்கு வந்து நேரடியாக குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பேன் இந்த திட்டத்தின் மூலம் 90 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கிடைக்கும் இவ்வாறு பல திட்டங்கள் இந்த அரசு செய்துள்ளது திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் அதிமுகவில் ஒருவர் தவறு செய்தால் அவர் யாராக இருந்தாலும் சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் திமுகவில் அதுபோன்ற நிலை இல்லை இன்று தமிழகம் சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக உள்ளது தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு இறந்த பொதுமக்களுக்காக 8 மாதம் ரேஷன் கடையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 40 கிலோ அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது மேலும் ரூ 1000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது பொதுமக்களுக்கு தூணாக இருந்து மக்களுக்கு நல்லது செய்வதே இந்த அரசின் லட்சியம் ஆகும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள் தைப்பொங்கலை ரொட்டி அம்மாவின் அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2500 பணம் சர்க்கரை அரிசி திராட்சை முந்திரி வழங்கியுள்ளது ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து இந்த அரசு மக்களுக்கு செய்து வருகிறது சுய உதவிக் குழுவினருக்கு 80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது திமுக ஆட்சியில் ரூ 8000 கோடி தான் கடன் வழங்கப்பட்டது தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரம் உயர ரூ 80 ஆயிரம் கோடிக்கு மேல் அம்மா அரசு கடன் உதவி வழங்கி உள்ளது இந்த அரசு பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளது உள்ளாட்சித் துறையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளது மேலும் உறுப்பு மாற்று சிகிச்சை நீர் மேலாண்மை மின்மிகை மாநிலம் கல்வி என பல துறைகளிலும் தேசிய விருது பெற்று தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது திமுக ஆட்சியில் சரியான நிர்வாக திறமை இல்லாததால் ஒரு விருது கூட பெற முடியவில்லை சாயப்பட்டறை கழிவுநீர் அமைக்க 26 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி உதவிக்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, காவிரி ஆறு சுத்தமாக இருக்க பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு செய்ய மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையில் இடம்பெற்றுள்ளது, நீர் மேலாண்மை கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது தற்போது 100-க்கு 49 பேர் உயர்கல்வி படித்து வருகிறார்கள் இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழகம் தான் அதிகம் பேர் படித்து வருகிறார்கள் இது ஸ்டாலினுக்கு தெரியாது மக்களைப் பற்றி சிந்திக்காமல் அவர் கூறுவது அனைத்தும் பொய் பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருந்தும் இரவு பகல் பாராமல் இந்த அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது எனவே வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார் அங்கு இருந்த எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ,பின்னர் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார் பிறகு சித்தோடு ரோட்டில் உள்ள இந்து கல்வி நிலையத்தில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் சித்தோடு நோக்கி பயணித்தார் சித்தோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஈரோடு மக்களுக்கு இன்னும் 10 நாட்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று பேசினார் பிறகு மதிய உணவிற்காக வில்லரசம்பட்டி நால் ரோட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தொழில்முனைவோர் ,வக்கீல்கள் ,டாக்டர்கள் உடன் கலந்தாய்வு பிறகு மதிய உணவு எடுத்துக் கொண்டார் ,பிறகு சென்னிமலை, ஊத்துக்குளி இடங்களில் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார் பிறகு ஓடாநிலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மஞ்சள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் அதைத்தொடர்ந்து அரச்சலூர் பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடல் பின்னர் அவள் பூந்டையில் வரவேற்பு பெற்றுக்கொண்டு ஸ்ரீ பிளஸ் மஹாலில் கைத்தறி மற்றும் சக்தி தறி தொழில் முனைவோர் உடன் கலந்துரையாடல் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உடன் கலந்துரையாடுகிறார் இரவு பெருந்துறை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *