ஜவ்வாது மலைவாழ் பழங்குடியினருக்கான ஆடையகம் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்…
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சி, ஜமுனாமரத்தூர் சமுதாயக் கூடத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் மூலமாக நடைபெற்ற ஜவ்வாது மலைவாழ் பழங்குடியினருக்கான ஆடையகம் மற்றும் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப. அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, தையல் பயற்சி உபகரணங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்ச முகமை திட்ட இயக்குநர் திருமதி. பா. ஜெயசுதா, ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. ஜீவா மூர்த்தி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பயிற்சி பெறும் மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.