குமாரபுரம் துணை சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்…

Loading

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழி துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட, குமாரபுரம் துணை சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் நிலையத்தினை, மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பேசுகையில் :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்திவரும் சிறப்பான திட்டம் அம்மா மினி கிளினிக் அமைக்கும் திட்டம். அம்மா மினி கிளினிக் அமைப்பதற்கான நோக்கம் கிராமப்புறங்களில் வாழ்கின்ற ஏழை, எளிய பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அதை குணப்படுத்துவதற்காகவே, அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 15 அம்மா மினி கிளினிக் அமைக்கப்படவுள்ளது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் 5 அம்மா மினி கிளினிக் அமைக்கப்படவுள்ளது. அதில் ஒரு பகுதியாக தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட காட்டுப்புதூர் ஊராட்சி பகுதியிலும், இராஜாக்கமங்கலம்துறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சி, இலந்தையடிதட்டு பகுதியிலும், அழகப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட, அஞ்சுகிராம் பேரூராட்சி, அஞ்சுகிராமம் காவல் நிலைய பகுதியிலும், சிங்களேயபுரி துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட பறக்கை ஊராட்சி, பறக்கை ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்திலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று ஆரல்வாய்மொழி துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட, குமாரபுரம் துணை சுகாதார நிலைய வளாகத்தில் அம்மா மினி கிளினிக் துவக்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், ஆரல்வாய்மொழி துணை சுகாதார மையத்தின் வாயிலாக, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமாரபுரம் மற்றும் கண்ணப்பநல்லூர் கிராமமும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குமாரபுரம், கிருஷ்;ணபுரம், மடநாடார்குடியிருப்பு மற்றும் கே.கே.நகர் ஆகிய 6 கிராமங்களை சார்ந்த 2,535 குடும்பங்களிலுள்ள பொதுமக்கள் இந்த முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் வாயிலாக பயனடைவார்கள்.கிராமப்புறங்களில் வாழ்கின்ற ஏழை, எளிய பொதுமக்களுக்கு அந்தப் பகுதியிலேயே, அம்மா மினி கிளினிக் செயல்படும்போது, அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடி, தங்களுடைய நோயை குணப்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்களின் உடல் நிலையை கருத்தில்கொண்டு, சனிக்கிழமை தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் அம்மா மினி கிளினிக் செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2000 மினி கிளினிக்கை தொடங்கியுள்ளார்கள். இந்த மினி கிளினிக் வாயிலாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட சிறிய நோய்கள் ஏற்பட்டால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியும். சுகாதாரத்தை பேணுவதற்காகவும், தற்போது கொரோனா வந்ததால் அனைவரும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். முதலமைச்சரின் மினி கிளினிக் நோக்கம் நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் இங்கே இருக்ககூடிய அனைவருக்கும் எந்த காலத்திலும் எந்த நோய் வந்தாலும் அதனை தடுப்பதற்கான முயற்சி செய்வோம்; என்பதற்காகதான் இந்த மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. நான் அமைச்சராக இருக்கும்போது, இங்கு இருக்ககூடிய நடுநிலைப்பள்ளிகள் எல்லாம் உயர்நிலைப்பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் இங்குள்ள மாணவ, மாணவர்கள் எல்லாம் மிகவும் சிரமப்பட்டு படிக்க வேண்டுமென்றால் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகதான், அன்றை சூழ்நிலையில் எந்த பணமும் கட்டாமல் இங்கே இருந்த பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் பேசினார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள்; 5 கர்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்சேய் நல பெட்டக பொருட்களை வழங்கினார்கள். நடைபெற்ற விழாவில்;, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோ ராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி.இ.சாந்தினி பகவதியப்பன், தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் திரு.பி.ஷேக் சையது அலி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.இராஜகுமாh, திரு.மாடசாமி, திருமதி.லதா ராமச்சந்திரன், திருமதி.ரமணி, திருமதி.ரோகிணி அய்யப்பன், திரு.கே.சி.யு.மணி, திரு.பூதை மகேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
————————————————————————————————————————————- வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *