சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து பள்ளிகள் மற்றும் தேர்தல் பணி வழங்குதல் தொடர்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினர்*

Loading

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன்

கொரானா பெருந்தோற்று காலத்தில் மாணவர்களின் கல்வியை நல் வழியில் கொண்டு சொல்லும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது மேலும் எதிர்காலத்தில் 15 சதவீதமாக உயர்த்தி அதில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மூன்று சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனவும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது போடப்பட்ட 17பி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்

தற்போது கொரானா காலத்தில் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்பில் கல்வி பயில்கின்றனர் அவர்களுடைய வாழ்க்கையை கருத்தில் கொண்டு
புதிய ஆட்சி அமையும் வரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்

0Shares

Leave a Reply