மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பாக குடும்ப நல திட்ட அட்டை வழங்கும் விழா.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தோக்கவாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக குடும்பநல திட்ட அட்டை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது, இவ்விழாவினை கலெக்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தது தலைமை உரை ஆற்றி குடும்ப நல திட்ட அட்டைகளை வழங்கினார், இவ்விழாவில், மருஏ, அன்பரசி, துணை இயக்குனர், குடும்பநல திருவண்ணாமலை, வரவேற்பு உரையாற்றினார், சிறப்பு ஆலோசகர் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் சென்னை மரு எஸ்,ஷோபா, திட்ட விளக்க உரையாற்றினார், குடும்ப நல திட்ட விளக்க உரையை, இணை இயக்குனர் ,ஜெகநாதன், மரு எஸ் ,அமுதா, இணை இயக்குநர் (ஆய்வு) சென்னை மரு, எஸ், கண்ணகி, இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) திருவண்ணாமலை மரு, கே,எம் ,அஜித்தா, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் திருவண்ணாமலை மரு. எம் ,சங்கீதா, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் செய்யார், ஆர், அமரேசன், மக்கள் கல்வி தொடர்பு மற்றும் அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர், பின்னர் இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடும்ப நலஅட்டைகள் வழங்கப்படுகின்றது, திருவண்ணாமலை மாவட்டம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் விகிதாசாரத்தில் 12வது தரவரிசையில் உள்ளது, ஆண்டிற்கு 33, 500 குழந்தைகள் பிறக்கின்றது, அதில் 5, 500 பிரசவங்களில் 3 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களாக இருக்கிறார்கள், திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 4041 செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 1459 பேர்களும் உள்ளனர், மாநில அளவில் 3, குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் சதவிகிதம்7,2, ஆக உள்ளது, இதில் செய்யர் சுகாதார வட்டம் 17, 0 சதவீதமாகவும் ஆக உள்ளது, திருவண்ணாமலை மாவட்டம் 132 சதவீதமாக உள்ளது, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்,அரசு மருத்துவமனை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2295 கருக்கலைப்புகள் நவம்பர் 2020 வரை செய்யப்பட்டுள்ளது. இக்கருக்கலைப்பு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் களிடம் தகவல் தெரிவித்து கிராம சுகாதார செவிலியர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும், மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் சமூகத் தலைவர்கள் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும், என்றும்இந்த குடும்ப நல திட்ட அட்டையை பயன்படுத்தி பொதுமக்கள் நமது மாவட்டம் முன்மாதிரி மாவட்டமாக திகழ வேண்டும், என்றார்,