தனியார் தொழிற்சாலை ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணம் ரூ.1.50 கோடி மோசடி : திருவள்ளூர் எஸ்.பியிடம் பெண் ஊழியர்கள் புகார் :
திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி கிராமத்தில் கார் கதவுகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இவர்களது மாத ஊதியத்தில் இ.எஸ்ஐ., மற்றும் பி.எப் -தொகை மாதம் தோறும பிடித்தம் செய்து வந்துள்ளனர்.ஆனால் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை இஎஸ்ஐ மற்றும பிஎப் நிறுவனத்திற்கு செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இது குறித்து ஊழியர்கள் தொழற்சாலை நிர்வாகத்திடம் கேட்ட போது ஒப்பந்த அடிப்படையில் தான் வேலை செய்து வந்ததாகவும், ் அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
தொடர்நது ஊழியர்கள் வற்புறுத்தியதால் 60-க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்கி உத்தரிவ்டடுள்ளனர். தொழிற்சாலை நிர்வாகம் மூலம் நேரடியாக பணியில் அமர்த்தப்பட்ட தங்களை ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்ததாக கூறி தங்களை தகாத வார்த்தைகளால் பேசி அலைக்கழிப்பதாகவும் தங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த இஎஸ்.ஐ., பிஎப் பணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி பெண் ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் எஸ்பி., அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின் பேரில் பெண் ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர்.