டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் சங்கம் பேர்ணாம்பட்டில் ஆர்ப்பாட்டம்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் சங்கம் பேர்ணாம்பட்டில் ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி மக்கள் பேருந்து நிலையத்தில் நேற்று காலை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் நல்லாசிரியர் லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஆசிரியர் ரகுபதி, மாநில துணைத்தலைவர்அரிமூர்த்தி, மாநில செயலாளர் உதயகுமார், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ஆனந்த ரெட்டி மாவட்ட அமைப்பு செயலாளர் ராமதாஸ், எஸ். வி.வெங்கடபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் விவசாய பயிர்களை அழிக்கும் குரங்கு, பன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளை தடுக்க சோலார் மின் வேலி அமைத்து தர வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்துவித கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகை ரூ ஆயிரத்திலிருந்து 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களிலிருந்து விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் பத்தலப்பல்லி கிருஷ்ணன் நன்றி கூறினார்.