சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
வடபழனியில் தங்கை வீட்டில் தங்கியபோது, தங்க நகைகள் மற்றும் பணம் திருடிய அண்ணன் கைது. 40 சவரன் தங்கநகைகள் மற்றும் பணம் ரூ.32,000/- மீட்பு
சென்னை, கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் 2வது தெரு, எண்.9A/11 என்ற முகவரியில் ஷோபனா, வ/39, க/பெ.சாதிக் பாட்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்த சுமார் 50 சவரன் தங்கநகைகள் மற்றும் பணம் ரூ.80,000/-ஐ காணவில்லை என R-8 வடபழனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-8 வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.N.செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.R.தினேஷ்குமார், தலைமைக்காவலர் திரு.M.ராஜ்மோகன் (தா.க.24770) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர், சம்பவயிடத்தில் தீவிர விசாரணை செய்து, சிசிடிவு பதிவுகளை ஆய்வு செய்ததில், ஷோபனாவின் கணவர் சமீபத்தில் இறந்த காரணத்தால் ஷோபனா அவரது மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் அவரது வீட்டில் தங்கி இருந்த ஷோபனாவின் அண்ணன் பஷீர் முகமது சாஹித் என்பவர் தங்கநகைகளை திருடிச்சென்றது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில் காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு குற்றவாளி பஷீர் முகமது சாஹித், வ/45, த/பெ.பஷீர் அகமது, அரபாமஞ்சில், கைபாஸ் ரோடு, சிட்டத்து முக்கு, திருவனந்தபுரம், கேரளா என்பவரை, ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடமிருந்து 40 சவரன் தங்கநகைகள் மற்றும் பணம் ரூ.32,000/- மீட்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட பஷீர் முகமது சாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
2 . பாண்டிபஜார் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் 4 மணி நேரத்தில் 2 குற்றவாளிகள் கைது.
சென்னை, தி.நகர், டாக்டர் தாமஸ் ரோடு, கதவு எண்.8/14 என்ற முகவரியைச் சேர்ந்த செந்தில், வ/36 (பெயிண்டர்), த/பெ.சேகர் என்பவர் கடந்த 29.12.2020 இரவு சுமார் 10.00 மணியளவில் தி.நகர், கிருஷ்ணசாமி தெருவில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் R-4 பாண்டிபஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலையுண்ட செந்திலின் மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய R-4 பாண்டிபஜார் காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.சந்திரசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.S.கார்த்திக், முதல் நிலை காவலர்கள் S.மணிகண்டன், (மு.நி.க.30850) மற்றும் காவலர் D.சார்லஸ் (கா.52512) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சுரேஷ் (எ) சொரி சுரேஷ் வ/32, த/பெ.தீனதயாளன், டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை, 2.அசோக் (எ) அசோக்குமார், வ/22, த/பெ.வெங்கடேசன், டாக்டர் தாமஸ் ரோடு, தி.நகர் ஆகிய இருவரை கொலை சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சம்பவத்தின்போது, கொலையுண்ட செந்தில் மேற்படி 2 குற்றவாளிகளுடன் சேர்ந்து மது அருந்தியபோது, செந்தில் குடிபோதையில் மேற்படி இருவரையும் அசிங்கமாக திட்டி அடித்ததால், ஆத்திரமடைந்த எதிரிகள் செந்தில் தலை மீது கான்கிரிட் கல்லை போட்டு கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணையில் குற்றவாளி சுரேஷ் (எ) சொரி சுரேஷ் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் 2 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
3. கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் லேப்டாப் திருடிய குற்றவாளி கைது. சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 11 லேப்டாப்கள், 9 செல்போன்கள், 8 கிராம் தங்க நகைகள் பறிமுதல் .
சென்னை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், சர்தார் காலனி, எண். 7/3 என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலை செய்து வரும் கிரிதரன், வ/28, த/பெ.கெங்காதரன் என்பவர் கடந்த 19.10.2020 இரவு விடுதியில் தூங்கிவிட்டு மறுநாள் காலை தனது அறையில் இருந்த லேப்டாப் தேடியபோது அது திருடு போயிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் கிரிதரன் J-3 கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையாளர் அவர்களின் அறிவுரையின்படி, J-7 வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.ஶ்ரீதர், தலைமைக்காவலர்கள் S.அச்சுதராஜ், (த.கா.32251), D.தாமோதரன், (த.கா.17039) மற்றும் ஊர்காவல் படை வீரர் M.சந்தோஷ்குமார் (எண்.4791) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர், சம்பவயிடத்தில் தீவிர விசாரணை செய்தும், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், குற்றவாளியின் அடையாளங்களை கொண்டு மேற்படி லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட ராஜதுரை, வ/23, த/பெ.முத்து, கீழதெரு, ஜவுளிபாளையம், கள்ளகுறிச்சி என்பவரை திருச்சியில் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 11 லேப்டாப்கள், 9 செல்போன்கள், 8 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
4. குன்றத்தூர் பகுதியில் கார் திருடிய 2 நபர்களை ரோந்து ஆயுதப்படை காவலர்கள் கைது செய்தனர். கார் பறிமுதல்.
அம்பத்தூர் துணை ஆணையாளர் மருத்துவர் தீபா சத்யன், இ.கா.ப., அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் திரு.M.ரேணுகோபால் (கா.எண்.44826), திரு.B.மனோஜ்குமார் (கா.எண்.45919), திரு.A.சலீம்மாலிக் (கா.எண்.42551) திரு. K.பிரதீப் ராஜ்குமார் (கா.எண்.47118) மற்றும் திரு.S.சிவபிரகாஷ் (கா.எண்.49683) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் நேற்று (03.1.2020) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திருமுடிவாக்கம், 400 அடி வெளிவட்ட மேம்பாலத்தின் மீது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக காருடன் நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்ய சென்றபோது, 2 நபர்களும் காரை விட்டு தப்பியோடியபோது, காவல் குழுவினர் துரத்திச் சென்று பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் குடிபோதையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். மேலும் அவர்கள் வந்த கார் திருட்டு கார் என்பது விசாரணையில் தெரியவந்ததின்பேரில் இருவரையும் கைது செய்து T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
T-13 குன்றத்தூர் காவல் நிலைய காவல் குழுவினர் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.தினேஷ், வ/19, த/பெ.ரவி, கருமாரியம்மன் கோயில் தெரு, பட்டூர், சாந்தி நகர், மாங்காடு 2.அசோக், வ/23, த/பெ.இளங்கோவன், முத்துமாரியம்மன் கோயில் தெரு, பட்டூர், மாங்காடு என்பதும், இருவரும் அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவரின் காரை திருடிக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
5. அண்ணா நகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் மூலம் செல்போன் பறிப்பு, திருட்டு, வழிப்பறி என 40 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 37 குற்றவாளிகள் கைது. 95 செல்போன்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் கடந்த 01.8.02020 முதல் சென்னை பெருநகர 12 காவல் மாவட்டங்களில் சிறப்பு சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டு, பொதுமக்களின் இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்களை பெற்று நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும், காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களும், இந்த மாவட்ட சைபர் குற்றப்பிரிவின் IMEI தகவல் திரட்டும் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அண்ணா நகர் துணை ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில் அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவைச் சேர்ந்த T-4 மதுரவாயல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.R.R.வெங்கடேசன், V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் கதிரவன் (த.கா.20929), V-6 கொளத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிசங்கர் (த.கா.32238) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் உரிய தொழில் நுட்ப வசதியுடன் தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் செல்போன் பறிப்பு, திருட்டு, வழிப்பறி என 40 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 37 குற்றவாளிகளை கைது செய்ய உதவியுள்ளனர். மேலும், குற்றவாளிகளிடமிருந்து 95 செல்போன்கள் மற்றும் 10 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (04.01.2021) நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.
******