மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
![]()
திண்டுக்கல் மாவட்டம், மா.மூ.கோவிலூரில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-
மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காகவும் மகளிருக்காக பல திட்டங்களை அறிவித்து அத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
