அகத்திய முனிவரின் பிறந்த தினமான மார்கழி மாதத்திலுள்ள ஆயில்யம் நட்சத்திரத்தை கொண்டு கடந்து 3 வருடமாக சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

Loading

4-வது தேசிய சித்த மருத்துவ தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய சித்த மருத்துவ தினமானது, பதிணென் சித்த மருத்துவர்களில் முதன்மையானவரான அகத்திய முனிவரின் பிறந்த தினமான மார்கழி மாதத்திலுள்ள ஆயில்யம் நட்சத்திரத்தை கொண்டு கடந்து 3 வருடமாக சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில், நடைபெற்ற 4-வது தேசிய சித்த மருத்துவ விழா, சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் இயக்கத்தை துவக்கி வைத்து, தெரிவித்ததாவது :-
கொரோனா காலத்தில் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் குடும்ப சூழ்நிலைகள், தன்நலன் ஆகியவற்றை பார்க்காமல், அர்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். உங்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகிறேன். சித்த மருத்துவம் என்பது வருமுன் காப்போம் என்பதே ஆகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *