திருவண்ணாமலையில் கோகுல மக்கள் கட்சி யின் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது……..

Loading

யாதவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு 16% வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோகுல மக்கள் கட்சியின் சார்பில் முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் அழகுமுத்து கோன் வீர வரலாறு தமிழக பாட புத்தகத்தில் 10ம். வகுப்பில் சேர்க்க வேண்டும். என்றும் தமிழகத்தில் சட்டமன்ற தனித் தொகுதிகளில் 10, ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றி அமைக்க வேண்டும். தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளம், குட்டை , மற்றும் ஆறுகளில் ஆக்கிரமிப்பு அகற்றி தடுப்பணைகளை ஏற்படுத்தி விவசாய துணை நிலை விவசாயிமான கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை பாதுகாத்து தரவேண்டும். உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து.மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில். சிறப்பு அழைப்பாளராக, தலைமையுரை எம் ,வி, சேகர் யாதவ், டெல்லி அப்போலோ மருத்துவமனை டாக்டர், அனில் யாதவ்,உரையாற்றினார் மாநில இளைஞரணி செயலாளர், கு, ராஜாராம்,தலைமை தாங்கினார்.மத்திய அரசு வழக்கறிஞர் டி, எஸ், சங்கர் முன்னிலை, வகித்தார்.மத்திய மாவட்ட செயலாளர், வாசுதேவன், வடக்கு மாவட்ட செயலாளர், எழில்ரசன், தெற்கு மாவட்ட செயலாளர், வீரப்பன், நகர செயலாளர், எஸ், செந்தில்வேலன், மாவட்ட இளைஞரணி செயலாளர், ந, ராகுல், மற்றும் கோகுல மக்கள் கட்சி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *