பல்வேறு மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் இணையும் விழா
பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேளாரஅள்ளி ஊராட்சியில் 1200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேளாரஅள்ளி ஊராட்சி மன்றத்லைவர் ராதா மாரியப்பன் தலைமையில் வேளாவள்ளி,எருமாம்பட்டி, செம்மநத்தம், மல்லசமுத்திரம், சித்திரப்பட்டி உள்ளிட்ட 12 கிராமத்தை சேர்ந்த திமுக,பாமக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 1200க்கும் மேற்பட்டோர் உயர்கல்வி மற்றும் வேளாண்த்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் அஇஅதிமுக வில் தங்களை இனைத்துகொண்டனர்.
புதியதாக தங்களை அஇஅதிமுகவில் இணைத்து கொண்டவர்களுக்கு அமைச்சர் அன்பழகன் கட்சி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சில் மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், ஒன்றி செயலாளர்கள் கோபால், செந்தில், முன்னள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.