திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்திருக்கிறார்கள் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

Loading

சென்னை, ஜூன்- 24

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு இல்லை என சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு…

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேத்தியின் திருமணத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் துர்கா ஆகியோர் நடத்தி வைத்தனர்  அப்போது பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ;

இவ்வளவு பெரிய , ஆடம்பரமான இந்த திருமண மண்டபத்தில், நடைபெறும் இந்த திருமணத்தில், நம் வீட்டு திருமணம் நடப்பது போன்று எல்லோரும் இங்கு வாழ்த்த வந்துள்ளோம்..இதே போல வேறொரு பக்கம் உள்ள மண்டபத்தில், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் நான் அதற்குள் போக விரும்பவில்லை அது நமக்கு தேவையுமில்லை. (அதிமுக பொதுக்குழுவை சாடுகிறார்)அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை. ஆனால் அவர்கள்தான் திமுகவை அழிப்போம் என்று கூறுகிறார்கள்.திமுகவை அழிக்க நினைத்தவன் எல்லாம் அழிந்துதான் போயிருக்கிறானே தவிர திமுக அழிந்ததாக வரலாறு இல்லை என பேசினார் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் எங்கே இருந்தாலும் விசுவாசமாக இருக்கக் கூடியவர்.எம்.ஜி.ஆர் தலைமையில் அமைச்சராக இருந்தவர்..ஜெயலலிதா தலைமையில் அமைச்சராக இருந்தவர்..

கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.

இன்றைக்கு என்னுடைய தலைமையிலான ஆட்சியிலும் அமைச்சராக உள்ளார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லவில்லை..தலைமைச்செயலகம் தான் செல்கிறேன் என தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ; திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, கீதாஜீவன், ராஜகண்ணப்பன் ராமச்சந்திரன் மெய்யநாதன் தங்கம் தென்னரசு மற்றும்  நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 5 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருந்த

முதலமைச்சர் ஸ்டாலின் முதன்முதலாக கேகேஎஸ்எஸ்ஆர் ஆர் இல்லத்திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்தினார்