தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மாஜி அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மாஜி அமைச்சர் ஜெயகுமார் குற்றம சாட்டியுள்ளார், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது மீதான வழக்கில் ஜாமீன் கையெழுத்திடுவதற்காக ராயபுரம் காவல் நிலையத்திற்கு வந்தார்.அவரை அதிமுகவினர் திரளாக திரண்டு வழியெங்கும் தூவி வரவேற்றனர்,கையெழுத்திட்ட பின்னர் , ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் பதவிகளில் போட்டியிட்டார்கள்,.முதல்வர் சொல் லுக்கு திமுகவினர் கட்டுபடவில்லை.அதிமுகவினர் அனைவரும் ஜெயலலிதா சொல்லே வேதம் என்று செயல்பட்டார்கள் ,திமுகவினர் யாரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கட்டுப்பட மறுக்கிறார்கள்.என்று குற்றம் சாட்டினார் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன் என்று அடுத்தடுத்து டெல்லிக்கு வரிசையாக காவடியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.முந்தைய திமுக ஆட்சியில் தாரைவார்த்த கச்சத்தீவை முதல்வர் ஸ்டாலின் மீட்டெடுக்கப்போகிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.இரட்டை குதிரையில் சவாரி செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் திமுகவினர் என்றும் 10 மாதகால ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக ஜெயகுமார் குறை கூறினார் மேலும், உச்சநீதிமன்றத்தில் 10.5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு தரப்பில் சரியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஜெயகுமார், இதற்கு அதிமுக ஆட்சி அலங்கோலமே காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது, ஆடத்தெரியாதவர்களின் கூடம் சரியில்லை என்று சொல்வது போன்றது.தமிழகத்தில் போதை வழக்குகளில் 10,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை கூறியுள்ளது அப்படி என்றால் தமிழகத்தில் போதை வஸ்துகள் சுலபமாக கிடைப்பதாக தான் அர்த்தமாகிறது என்றார்
Read more