பதிவுத்துறைக்குபெயிரா நன்றி பாராட்டு

Loading

  பதிவுத்துறைக்குபெயிரா பாராட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள், பொது மக்களின் நலன் கருதி பதிவுத்துறை தலைவருக்கு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக ஆனி மாதம் கடைசி சுபமுகூர்த்த தினங்களான (14.07.2025) திங்கட்கிழமை மற்றும் (16.07.2025) புதன்கிழமைகளில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிட்டிருக்கும் பொது மக்களின் எண்ணிக்கையானது வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்பதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் 100  டோக்கன்கள் வழங்கும் பதிவு அலுவலகங்களில் 150 டோக்கன்களும், 200 டோக்கன்கள் வழங்கும் பதிவு அலுவலகங்களில் 300 டோக்கன்களும், அதிகப்படியான ஆவணங்கள் பதிவாகும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் 150 டோக்கன்களும் கூடுதலாக தட்கல் டோக்கன்களும் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். மேற்கண்ட சுப முகூர்த்த தினங்களில் ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிடும் பொதுமக்களின் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும். ஆகவே கூடுதல் முன்பதிவு டோக்கன்களை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட பதிவுத்துறை தலைவருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

Read more