தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டும் வெயிலின் தாக்கமும் ,கோடை மழையும் அதிகமாக இருக்கும் என்று வானிலை
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.இது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்:வளிமண்டல மேலடுக்கு
ஊராட்சிகளில் இனி அனுமதி பெற ஒருங்கிணைந்த கட்டணம்.தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா நன்றி பாராட்டி கடிதம். தமிழக கிராம ஊராட்சிகளில் மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி வழங்குவதற்கு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் டாக்டர் ஹென்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நாளும் பல வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் தங்களின் சீரிய நிர்வாகத் தலைமையின் கீழ் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆகிய நிர்வாக பொறுப்புகளில் பொறுப்பு வகித்தவர்கள் பணி மாறுதலுக்கு உள்ளாகியதால், அந்த பொறுப்புக்கு உட்பட்ட எந்த பணிகளும் நடைபெறாமல், பட்டா உள்ளிட்ட அனைத்து பணிகளும் தேக்க நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது. மேற்கண்ட பொறுப்புகளுக்கு கடந்த 01.12.2024 அன்று உரிய அலுவலர்களை நியமித்து தாங்கள் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை அவர்கள் பொறுப்பேற்காததால் இன்னும் பணி தேக்க நிலை அடைந்து கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆகவே பெருமதிப்பிற்குரிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் நலன் கருதி கனிவுடன் பரிசீலித்து, பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இதுவரை தீர்வு ஏற்படாமல் தேக்க நிலையில் உள்ள கோப்புகளை விரைந்து முடித்து தீர்வு காண்பதற்கு, போர்க்கால அடிப்படையில் போதிய அளவிற்கு கூடுதல் பொறுப்புகளில் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் உரிய அலுவலர்களை நியமித்து உடனடியாக பொறுப்பேற்பதற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து, உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.