புகையில்லா சமையலறை ஒவ்வொரு இல்லத்தரசியின் உரிமை: பிரதமரின் உஜ்வாலா திட்டம் PIB Chennai இந்தியாவிலுள்ள பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் நோக்கில் 2016 ம் ஆண்டு பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்
கிராமப்புறங்களின் முன்னேற்றமே வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு அடித்தளமாகும் PIB Chennai நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் எனும் யாத்திரை தமிழ்நாட்டின் சேலம், அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடங்கி
வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை: சேலம், நீலகிரி மாவட்டங்களில் மக்கள் வரவேற்பு விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்ப செயல்விளக்கம் PIB Chennai நமது லட்சியம் வளர்ச்சியடைந்த இந்தியா சபத
மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திருமிகு பிரதிமா பௌமிக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் திவ்ய கலா மேளா என்ற கண்காட்சியை சென்னையில் இன்று (17.11.2023) அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 274 மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.2.75 கோடி கடனுதவியை அவர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் பிரதிமா பௌமிக், மாற்றுத்திறனாளி கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் உற்பத்திப் பொருட்கள் கொண்ட கண்காட்சியை நாடு முழுவதும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை நடத்தி வருவதாக தெரிவித்தார். தில்லி, மும்பை, குவகாத்தி, போபால், செகந்திராபாத், பெங்களூரூ, ஜெய்ப்பூர், வாரணாசி, இந்தூர் ஆகிய ஒன்பது நகரங்களில் ஏற்கனவே இந்த கண்காட்சி நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பத்தாவதாக தற்போது சென்னையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பது கண்காட்சிகளில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தி அவர்களை தொழில்முனைவோராக்குவதற்கு அரசு பல ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துவதாகவும் அவர் கூறினார். மாற்றுத்திறனாளிகள் தற்சார்புடையவர்களாக மாற வேண்டும் என்ற நோக்கில் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மிகக்குறைந்த வட்டியில் பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதே போல் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் செயல்படுவதாக இணையமைச்சர் திருமிகு பிரதிமா பௌமிக் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் நிறுவனமான நிப்மட் (NIPMED) இயக்குநர் திரு நசிக்கேதா ரௌத், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகமான என்டிஎஃப்டிசி-ன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான திரு நவீன் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை திருவான்மியூர் சிஇஆர்சி வளாகத்தில் உள்ள கண்காட்சி மைதானத்தில் இன்று (17.11.2023) தொடங்கி 10 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 87 மாற்றுத்திறனாளி கைவினைஞர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். கண்காட்சி நிறைவில் சிறந்த விற்பனையாளர் மற்றும் சிறந்த வாங்குவோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் புதுதில்லியில் நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை புலிகள் பாதுகாப்பு தொடர்பான கலைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது புதுதில்லி, அக்டோபர் 29, 2023 சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சங்கலா அறக்கட்டளையுடன் இணைந்து, “அமைதியான உரையாடல்: விளிம்பு நிலையில் இருந்து மையத்திற்குக் கொண்டு வருதல்” என்ற தலைப்பில், புதுதில்லியில் உள்ள இந்தியா ஹாபிடாட் சென்டரில் 2023 நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஒரு கலைக் கண்காட்சியை நடத்துகிறது. நவம்பர் 3, 2023 அன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த கலை கண்காட்சியின் மூலமாக புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50 ஆண்டுகள் நிறைவும் கொண்டாடப்படுகிறது. புராஜெக்ட் டைகர் எனப்படும் புலிகள் பாதுகாப்பு திட்டம் இந்தியாவில் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு முன்முயற்சியாகும். இது இந்தியாவின் தேசிய விலங்கான வங்கப் புலியைப் பாதுகாக்கும் முதன்மை நோக்கத்துடன் 1973 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் அவற்றுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் புலிகள் காப்பகங்களைச் சுற்றியுள்ள பழங்குடி சமூகங்களுக்கு வனவிலங்குகளுடன் ஆழமான வேரூன்றிய தொடர்பை இந்த கலைக் கண்காட்சி வெளிப்படுத்தும். காட்சிப்படுத்தப்படும் கலைப்படைப்புகள் ஓவியங்களின் வடிவத்தில் இருக்கும். இந்த ஓவியங்கள் கோண்டு, பில் மற்றும் பிற பழங்குடி சமூகங்களின் பழங்கால கலாசாரப் பிணைப்புகளைப் பிரதிபலிக்கும். ஓவியங்களை பார்வையாளர்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானம் கலைஞர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்.டி.சி.ஏ) 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு பணிகளில் முன்னணியில் உள்ளது. நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை அறிவியல் ரீதியில் கண்காணித்தல், புலிகள் காப்பகங்களை மதிப்பீடு செய்தல், புலிகள் காப்பகங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு, வனவிலங்குகளுக்கு சிறந்த இடத்தை உருவாக்குதல், சமூக மேம்பாட்டை உறுதி செய்தல், சர்வதேச ஒத்துழைப்பு என பல பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்கிறது. என்.டி.சி.ஏ மற்றும் சங்கலா அறக்கட்டளை இணைந்து முதல் முறையாக இது போன்ற கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்தியாவின் யுபிஐ: உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணியில் உள்ளது PIB Chennai சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இந்திய புத்தாக்கம் இடம் பெற்றிருந்தால், அது
என் மண் என் தேசம்’ இயக்கத்திற்காக தெற்கு ரயில்வே 2000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் மூன்று அமிர்த கலச யாத்திரை சிறப்பு ரயில்களை இயக்குகிறது PIB Chennai அமிர்த
*அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவை ஊக்குவிக்கும் பி.எம். ஸ்வநிதி* *இதுவரை ரூ.9,152 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.* *இத்திட்டத்தினால் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிரதமர் பாராட்டு* PIB Chennai தெருவோர வியாபாரிகளுக்காக
பொய்யான வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துமா தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி இலவசங்கள் எதையெல்லாம் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று
தேசத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ‘வீரர்களை’ கௌரவிப்பதற்காக நாடு தழுவிய ‘‘எனது மண், எனது நாடு” என்ற இயக்கம் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது நாடு முழுவதும்