இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு வேவ்ஸ் உச்சி மாநாடு எடுத்துச் செல்லும்
இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு வேவ்ஸ் உச்சி மாநாடு எடுத்துச் செல்லும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் PIB Chennai இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக வேவ்ஸ் (உலக ஒலி, ஒளி, மற்றும் பொழுதுபோக்கு) உச்சி மாநாடு அமையும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற தூர்தர்ஷன் சென்னை (டிடி தமிழ்) தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் படைப்பாற்றல் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.
Read more