மொபைல் போன் அடிமைத்தனம் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள்

Loading

கோவையில் சாதனை படைத்த மாணவ மாணவியர்கள்
மொபைல் போன் அடிமைத்தனம் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கோவையில் நடைபெற்ற ஆசம் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். பேர அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பஞ்ச் மற்றும் பிளாக் பயிற்சிகளை மேற்கொண்டு சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் செந்தில்குமார் பரமேஸ்வரன் கூறியதாவது
கடந்த 8 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளித்து வருகிறோம். கராத்தே மட்டுமின்றி சிலம்பம், வில்வித்தை, யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளிலும் மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடைபெறும் ஆசம் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மணி நேரம் தொடர்ந்து பஞ்ச் மற்றும் பிளாக் பயிற்சிகளைச் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மொபைல் போன்களுக்கு அடிமையாகி வருவதும், இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி வருவதும் கவலை அளிக்கிறது. இதிலிருந்து குழந்தைகளையும் இளைய தலைமுறையினரையும் பாதுகாத்து, அவர்களை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்துவதே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாகும்.

0Shares