பெங்களூரில் நடைபெற உள்ள, கண்காட்சி
![]()
கோவை பெங்களூரில் நடைபெற உள்ள, கண்காட்சி
ஆசியாவின் முன்னணி இயந்திரக் கருவிகள் மற்றும் உற்பத்தித் தொழில்நுட்பக் கண்காட்சியான இம்டெக்ஸ் 2027, எனூம் கண்காட்சி, பெங்களூருவில் வரும், ஜனவரி 21ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய இயந்திரக் கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பெங்களூரு சர்வதேசக் கண்காட்சி மையத்தில் நடைபெறும், இந்த கண்காட்சியானது 22-வது கண்காட்சியாகவும், இதில் சுமார், 24 நாடுகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும், சுமார்
85 ஆயிரம் சதுர மீட்டர், பரப்பளவில் 8 அரங்குகளில் நடைபெறும் இக்கண்காட்சியில் சிஎன்சி இயந்திரங்கள், ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன், 3D பிரிண்டிங், ஸ்மார்ட் தொழிற்சாலை மற்றும் டிஜிட்டல் உற்பத்தித் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதனுடன் டூல் டெக் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்கர்ஸ் கான கண்காட்சிகளும் நடைபெறுகின்றன.
மேலும், சர்வதேச கருத்தரங்குகள், மாணவர்களுக்கான தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் மற்றும் உற்பத்தித் துறையில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது
இந்திய இயந்திரக் கருவிகள் துறை 2025-26 நிதியாண்டில், 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.17,387 கோடி உற்பத்தியை எட்டியுள்ளதாக இவ்வமைப்பின் தலைவர் மோகினி கேல்கர் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

