கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா

Loading

கோவை ரயில் நிலையம் பகுதியில், தேவேந்திர குல, விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்த தாசன் ராமசாமி பன்னாடியின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில், புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.. 
கடந்த 1804ம் ஆண்டு பேரூர் வளநாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டமும், வரிகொடா இயக்கவும் நடத்திய புரட்சி படை தளபதி தாசன் ராமசாமி பன்னாடியின் வரலாற்றுச் சான்றுகள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழா கோவை இரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்திரன் இதழ் ஆசிரியர் உலகநாதன் எழுதிய இந்த புத்தகத்தை, சுயம்பு குருமகா சன்னிதானம் ராஜ தேவேந்திர சுவாமிகள் வெளியிட்டார். தொடர்ந்து விழா மேடையில் பேசிய உலகநாதன் கூறியதாவது..
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் இன முன்னேற்றத்திற்காக போராடி, இச்சமூகத்தின் குரலை, பொதுவெளிக்கு கொண்டு வந்த இச்சமூக தியாகிகளான தீபம் முனியப்பன், குனியமுத்தூரை சேர்ந்த அமரர் தங்கராசு,மற்றும் வீரமணி ஆகியோருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இச்சமூக விடுதலைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ள சுதந்திர போராட்ட தியாகி,
தாசன் இராமசாமி பண்ணாடியின் வாழ்க்கை குறித்த புத்தகம் வெளியீடு பட்டது. இந்த புத்தகம் இச்சமூகத்தின் வரலாற்று சுவடுகளை இனி வரும் தலைமுறையினருக்கு எடுத்து கூறும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க புத்தகம் எழுதிய உலகநாதனுக்கு, கோவை சிவாஜி காலனியை சேர்ந்த சமூக ஆர்வலரும், நோட்டரி வழக்கறிஞருமான புஸ்பானந்தம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணிக்கமள்ளர் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் விஜயகுமார், ரங்கநாதன், பிரஸ் காலனி ரவிச்சந்திரன், மகேந்திரன், தேவநாதன், செல்வராஜ், தங்கப்பழம், பன்னாடி ராமமூர்த்தி, அரிமா விஜயகுமார், மணிமாறன், சுந்தர்ராஜ், சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares