கிராம சபைக் கூட்டம் திருவண்ணாமலை

Loading

கிராம சபைக் கூட்டம்
திருவண்ணாமலை, நவ. 06- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்  நடந்த வளரிளம் பெண்களுக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமையேற்று மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களுக்கான கல்வியை உறுதிசெய்யவதன் அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண் குழந்தைகளின் வளர்ச்சி தான் சமூதயாத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கிறது.
பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் எனஅனைவருக்கும் சமமான கல்வியை அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கும் கல்வியின் முக்கியத்தும் அறிந்து அவர்களுக்கு உயர்கல்வி கற்க பெற்றோர்கள் உதவ வேண்டும். மேலும் பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி அனைத்து துறைகளிலும் சாதனைகள் புரிய வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியை பள்ளி மாணவர்கள், அரசு அலுலவர்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ஊராட்சிகளை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், மற்றும் கிராம ஊராட்சி செவிலியர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, ஆணையாளர் பா.விஜயலட்சுமி பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வி.வரலட்சுமி தாசில்தார் இந்திரா, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) எஸ்.பாரதி மகளிர் ஊர்நல அலுவலர் பச்சையம்மாள் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கீழ்பென்னாத்தூர் கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அனிதா நன்றி கூறினார்.

0Shares