கோவையில் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

Loading

கோவையில் 2,000 மாணவர்களுக்கு இதய நோய் விழிப்புணர்வு! சர்வதேச இருதய நிபுணர் பங்கேற்பில் சிறப்பு மருத்துவ முகாம்!
கோவை மாதம்பாளையம் கோட்டைபிரிவு பகுதியில் உள்ள சாய் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சர்வதேச இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். ராஜா ராஜன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இதய நோய்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதய பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம், திடீர் மருத்துவ அவசரநிலைகளில் உடனடியாக வழங்க வேண்டிய முதலுதவி மற்றும் உயிர் காக்கும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சுமார் 2,000 மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அவசர கால மருத்துவ உதவிக்காக காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட அவசரகால மருந்துகளும் வழங்கப்பட்டன.

கல்வியுடன் சமூகப் பொறுப்புணர்வையும் இணைத்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தி பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட இந்த முயற்சி பாராட்டைப் பெற்றது.

0Shares