கோவையில் பிரமாண்டமாக துவங்கபட்ட ஜூவல்லரி
![]()
கோவையில் பிரம்மாண்டமான புதிய ஷோரூமைத் துவங்கிய, விபிஜே ஜூவல்லரி!
900 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு, தென்னிந்தியா மற்றும் அமெரிக்காவில் வர்த்தக விரிவாக்கத்தை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய நகை நிறுவனங்களில் ஒன்றான விபிஜே ஜூவல்லரி என்றழைக்கபடும் வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், நிறுவனம், கோவையில் தனது புதிய பிரம்மாண்ட ஷோரூமைத் திறந்துள்ளது. தமிழகத்தில், மிகப்பெரிய ஷோரூம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், சுமார் 21,000 சதுர அடி பரப்பளவில், கோவை, 100 அடி சாலையில் அமைந்துள்ளது. சென்னையைத் தாண்டி தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நிறுவனத்தின் முக்கிய முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது.
126 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட இந்த நிறுவனம், சொந்த வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் திறனுடன் நகை விற்பனையையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மயில், மலர், கிளி, உள்ளிட்ட 15 தனித்துவமான நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை நிறுவனத்தின் படைப்பாற்றலையும் பாரம்பரிய கைவினைத் திறனையும் வெளிப்படுத்துகின்றன. மூன்று தளங்களைக் கொண்ட இந்தப் புதிய ஷோரூமில், ஒவ்வொரு தளமும் வெவ்வேறு நகை வகைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் தங்கம், விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகள் மற்றும் ஜடாவ் நகைகள் இடம்பெற்றுள்ளது. முதல் தளத்தில் வைரம், சாலிடேர் மற்றும் பிளாட்டினம் நகைத் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, ஷோரூம் திறப்பு குறித்து விபிஜே நிர்வாகப் பங்குதாரர்கள் அமரேந்திரன் வும்மிடி, மற்றும் ஜிதேந்திரா வும்மிடி ஆகியோர் கூறியதாவது.. “கோவையின் வலுவான வர்த்தகச் சூழலும், நகைகள் மீதான மக்களின் ஆர்வமும் இந்நகரை எங்களுக்கு முக்கியமான சந்தையாக மாற்றியுள்ளன. தமிழ்நாட்டிலேயே எங்களது மிகப்பெரிய ஷோரூமை இங்கு அமைத்திருப்பது, கோவையின் வளர்ச்சி மீதான எங்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், 126 ஆண்டுகளாக எங்களது அடையாளமாகத் திகழும் தரம், கைவினைத் திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையைத் தொடர்ந்து பேணுவதிலும் கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.

