கோவை ஆட்சியருக்குபனைமரக்கன்றுகள்வழங்கினார்

Loading

தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான பொது தொழிலாளர்கள் நல வாரியத்தின் மாநில இளம் தலைவர் எம் ஹரிஹரசுதன், கோவை மாவட்ட ஆட்சியருக்கு பனைமரக்கன்றுகள் வழங்கினார். 
தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான பொது தொழிலாளர்கள் நல வாரியத்தின் மாநில இளம் தலைவர் எம் ஹரிஹரசுதன் தமிழ்நாட்டு அளவில் 5 கோடி பனை மரக்கன்றுகள் மற்றும் பனைமர விதைகள் நடவு செய்வதற்கு தயார் நிலையில் இருந்து வருகிறார் . இந்த நிலையில், கோவை மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு நல வாரிய அலுவலகம் இயங்கிக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைவர்கள் இயங்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமாரை, நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் தேசிய மரமான பனை மரத்தை பற்றியும் பனைமரக்கன்றுகளை பற்றியும் தமிழ்நாட்டு அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் பனை மரக்கன்று விதைகளை வழங்கினார். ஆறாம் வகுப்பு படிக்கும் ஹரிஹரசுதனை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் ராதா, மாநில பொதுச் செயலாளர் எஸ் மாரியப்பன்,, மாநில பொருளாளர் எம் வசந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares