கோவை தமுமுக ஆலோசனை கூட்டம்

Loading

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், மாநில தலைமை செயற்குழு கூட்டம் கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்றது. பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், மாநில தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இந்த, செயற்குழு கூட்டத்தில், கலந்து கொள்ள, தமிழகத்தை சேர்ந்த பல்வேறு, மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், மாநில நிர்வாகிகளும், கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், நாளைய தினம் மாநில பொது குழு கூட்டமாக, கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. என்று தெரிவிக்க பட்டது. இதிலும் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், தெரிவித்துள்ளனர் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமத், மாநில பொதுச் செயலாளர் ஹாஜகனி, மாநில பொருளாளர் உமர், சபியுல்லா, மாநில செயலாளர் சாகுல் ஹமீது, நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares