மேல்நிலை குடிநீர்த்தொட்டிTNRERA உடனடிதீர்வு வேண்டும் FAIRA

Loading

 

“விதிமுறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்; இனிவரும் காலங்களில் முழுமையாகப் பின்பற்றத் தயாராக உள்ளோம்” – டாக்டர் ஆ.ஹென்றி

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் வட்டம், தர்மதானபுரம் கிராமம் மற்றும் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள “SAMPATH CITY” மனைப்பிரிவின் TNRERA பதிவு தொடர்பாக, மேல்நிலை குடிநீர்த்தொட்டி (Overhead Water Tank) அமைக்கப்பட்டுள்ள இடம் குறித்து எழுந்துள்ள ஆட்சேபனைக்கு உரிய சட்டப்பூர்வத் தெளிவை ஏற்படுத்தி, பதிவு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) சார்பில் TNRERA தலைவர் அவர்களிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மனைப்பிரிவிற்கு நகர ஊரமைப்பு துணை இயக்குநரின் மு.வ.ந.ஊ.அ. எண்.34/2025, மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரின் ROC No.0563/2026/B1, dated 30.03.2026 உள்ளிட்ட அனுமதிகளும், ஊராட்சிக்கு பதிவு செய்யப்பட்ட தான ஆவணம் எண்.3915/2025 உள்ளிட்ட தொடர்புடைய ஆவணங்களும் உள்ளதாக FAIRA தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மனைப்பிரிவில் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர்த்தொட்டி காரணமாக TNRERA பதிவு நடவடிக்கை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து FAIRA கூறுகையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் (TNCDBR) அல்லது தொடர்புடைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி விதிமுறைகளில், புதிய மனைப்பிரிவுகளில் மேல்நிலை குடிநீர்த்தொட்டி அமைப்பதற்காக தனியாக குறிப்பிட்ட நில ஒதுக்கீடு கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை தங்களது கவனத்திற்கு இதுவரை வரவில்லை என தெரிவித்துள்ளது.

அத்தகைய குறிப்பிட்ட விதிமுறை, அரசாணை அல்லது அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் ஏதேனும் நடைமுறையில் இருந்தால், அதன் சட்டப்பூர்வ ஆதாரத்தை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் FAIRA கேட்டுக்கொண்டுள்ளது.

“மேல்நிலை குடிநீர்த்தொட்டி எந்த ஒதுக்கீட்டில் அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக அரசு அல்லது சம்பந்தப்பட்ட துறை தெளிவான வழிகாட்டுதலை வழங்கினால், இனிவரும் காலங்களில் FAIRA-வுடன் தொடர்புடைய அனைத்து புதிய மனைப்பிரிவு திட்டங்களிலும் அந்த விதிமுறையை முழுமையாகப் பின்பற்றத் தயாராக உள்ளோம்” என FAIRA சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மனைப்பிரிவுகளில், அங்கு வீடுகளை அமைத்து வசிக்கவுள்ள பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பொதுப் பயன்பாடு / பூங்கா / திறந்தவெளி ஒதுக்கீடுகளில் குடிநீர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் FAIRA சுட்டிக்காட்டியுள்ளது.

குடிநீர் என்பது மனைப்பிரிவில் வசிக்கவுள்ள மக்களின் அடிப்படைத் தேவையாக இருப்பதால், குடிநீர் கட்டமைப்பு தொடர்பான விவகாரத்தில் தெளிவான சட்டப்பூர்வ வழிகாட்டுதல் அவசியம் என்றும் FAIRA தெரிவித்துள்ளது.

“தெளிவான சட்டப்பூர்வத் தடை அல்லது குறிப்பிட்ட விதிமுறை சுட்டிக்காட்டப்படாத நிலையில், மேல்நிலை குடிநீர்த்தொட்டி அமைந்துள்ள இடத்தை மட்டும் காரணமாகக் கொண்டு TNRERA பதிவை நீண்டகாலம் நிலுவையில் வைப்பது சம்பந்தப்பட்ட அபிவிருத்தியாளர் மட்டுமின்றி, மனை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும்” என FAIRA வலியுறுத்தியுள்ளது.

எனவே, “SAMPATH CITY” மனைப்பிரிவின் TNRERA பதிவு விண்ணப்பத்தை அனைத்து திட்ட மற்றும் உள்ளாட்சி அனுமதிகள், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையாக மறுபரிசீலனை செய்து, சட்டப்பூர்வத் தடையின்மை உறுதி செய்யப்பட்டால் பதிவை விரைந்து செய்து உரிய உத்தரவை வழங்க வேண்டும் என FAIRA சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் மேல்நிலை குடிநீர்த்தொட்டிக்கென தனி ஒதுக்கீடு அல்லது குறிப்பிட்ட இடம் தொடர்பான அரசு வழிகாட்டுதல் வழங்கப்பட்டால், அதனை முழுமையாகப் பின்பற்ற FAIRA மற்றும் அதன் உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விதிமுறை இருந்தால் தெளிவுபடுத்துங்கள்; விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம். அதே நேரத்தில், தற்போதைய மனைப்பிரிவு தொடர்பான பிரச்சினைக்கு சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் விரைவான தீர்வு காண வேண்டும்” என்பதே FAIRA-வின் முக்கிய கோரிக்கையாகும்.

0Shares