தர்மபுரியில் புதிய ஆதார் சேவை மையம்

Loading

தர்மபுரியில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது

சென்னை, செப்டம்பர் 6, 2026

தர்மபுரியில் புதிய ஆதார் சேவை மையத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இன்று தொடங்கியது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி திருமதி ஏ நித்தியலட்சுமி தொடங்கி வைத்தார்.

இந்த ஆதார் சேவை மையத்தில் புதிய பதிவுகள், விவரங்களை பதிவு செய்தல், பயோமெட்ரிக் புதுப்பித்தல், குறைதீர்ப்பு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொது விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் இந்த மையம் செயல்படும். மேலும், மக்களின் குறைகளுக்குப் பிராந்திய அலுவலகத்தின் மூலம் நேரடியாகத் தீர்வு காணப்படும்.

இந்தப் புதிய மையம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 11 ஆதார் சேவை மையங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இயக்கி வருகிறது. விரைவில் 19 மையங்களை அது திறக்க உள்ளது.

0Shares