கோவையில் நடைபெற்ற கலப்பு திருமணம்
![]()
கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற கலப்பு திருமணம்! கிறிஸ்தவ மத போதகர்கள் முன்னிலையில், கிறிஸ்தவ முறைப்படி இருவரும் பைபிள்களை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்..
கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக நோட்டரி வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில், கிறிஸ்தவ முறைப்படி கலப்பு திருமணம் நடைபெற்றது. கோவை மாவட்டம் சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிமியோன் என்கிற ஆனந்தன் என்ற 49,
வயதானவருக்கும், கோவை மாவட்டம் இடையர் பாளையம் பகுதியை சேர்ந்த ரூத் என்கிற சுமித்ரா என்ற 44 வயது பெண்ணுக்கும், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, இக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் நோட்டரி வழக்கறிஞருமான புஸ்பானந்தம் தலைமையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் வேறு வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணமாகி விகாரத்தும் பெற்றவர்கள், மணமகன் கோவை சரவணம்பட்டி பகுதியில் தேவாலயம் நடத்தி வருகின்றார். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இருவரும் மனப்பூர்வமாக வழக்கறிஞர் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது.
இந்த திருமணத்தை தாராபுரம் போதகர் அருள் தாஸ், திருப்பூர் போதகர் டேனியல், ஆகியோர் கிறிஸ்தவ துதி பாடல்கள் பாடியும், பைபிள் வசனங்களை எடுத்து கூறியும் பைபிளை ஒருவருக்கொருவர் மாற்றி திருமணம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் அமல்ராஜ், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் ஈடன், வழக்கறிஞர் சதாசிவம், வழக்கறிஞர் குமாஸ்தாகள் லட்சுமி, திவ்யா, மயில்சாமி, மதிமுக சார்பாக மார்ஷல், தனபாலன், துரைராஜ், பாப்பாத்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

