கோவையில் நடைபெற்ற ருத்ராபிஷேக விழா

Loading

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்க வளாகத்தில், ஜெகன்நாத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பிராப்பர்ட்டீஸ் சார்பில் மஹா ருத்ராபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது கரங்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் பன்னினர் 
ஆன்மீக உணர்வை மேம்படுத்தவும், பக்தி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், ஜெகன்நாத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பிராப்பர்ட்டீஸ் வழங்கும், பரமசிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் புனிதமான வேத யாகங்களில் ஒன்றான மகா ருத்ர அபிஷேக விழா மற்றும் ஒரு லட்சம் ருத்ர பாராயண நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்க வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாபெரும் ஆன்மீக நிகழ்ச்சி 20-ம் வருடமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வின் மூலம் உலக அமைதி, வளமான வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் அனைவரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மதியம் 12.00 மணி முதல் பக்தர்கள் தாங்களே கலந்து கொண்டு அபிஷேகம் செய்யும் நிகழ்வுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியுடன், மாலை 5.00 மணிக்கு மகா ருத்ர அபிஷேகம், மாலை 6.30 மணிக்கு மகா அலங்காரம், பின்னர் மாலை 7.00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது, மகா ருத்ராபிஷேக விழாவில், சிவபெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. 1008 லிட்டர் பசும்பால், 1008 தாமரைப் பூக்கள், 306 லிட்டர் தயிர், 108 இளநீர், 108 லிட்டர் கரும்புச் சாறு, 108 லிட்டர் பஞ்சாமிர்தம், 108 லிட்டர் பன்னீர், 108 லிட்டர் திருமஞ்சனம், 108 லிட்டர் சந்தனம், 108 லிட்டர் பழரசம், 108 கிலோ விபூதி, 18 கிலோ கரும்புச் சர்க்கரை, 18 கிலோ அரிசி மாவு, 18 லிட்டர் தேன் மற்றும் 18 லிட்டர் நெய் உள்ளிட்ட புனித திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், மற்றும் அனைத்து இந்து நதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட புனித நீர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.
0Shares