கோவை வருமான வரி சங்க ஓய்வூதியர்கள் மாநாடு
![]()
தமிழ்நாடு வருமான வரி ஓய்வூதிய சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்க அரங்கில் நடைபெற்றது அதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர் நடராஜன் பங்கேற்பு..
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்க அரங்கில், தமிழ்நாடு வருமான வரி ஓய்வூதிய சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. சங்க கொடியேற்றத்துடன் துவங்கபட்ட இந்த விழாவில், இந்திய வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் முன்னாள் மாநில பொதுச்செயலர் ராஜகோபால் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். வருமான வரி ஓய்வூதியர் கோவை மண்டல தலைவர் ஜோதி வரவேற்புரையாற்றினார் தமிழ்நாடு வருமான வரி ஓய்வூதியர் சங்க சென்னை தலைவர் கணேஷ்பாபு, தலைமை உரையாற்றினார் பொது செயலர் பெருமாள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஆர் நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு வருமான வரி ஓய்வூதியர்கள் சங்க கோவை மண்டல செயலர் வெங்கட்ராமன் கூறியதாவது..
இச்சங்கம் துவங்கி 14 ஆண்டுகள் கடந்துள்ளது. இச்ங்கத்தின் சார்பாக சர்வதேச மாநாடு நடத்திவிட்டோம்..
ஆனால் மாநில அளவிலான மாநாடு நடத்த படவில்லை. இதனை தொடர்ந்து இங்கு முதல் மாநில மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார். இந்த மாநாட்டின் வாயிலாக, அரசுக்கு ஒரு சில தீர்மானங்களை முன் வைத்து உள்ளோம். அதில் 1996ம் ஆண்டு முதல் கருத்தியல் ரீதியாக உயர்த்தபட்ட ஊதியம் பெறும் அனைத்து ஓய்வு பெற்ற வருமான வரி ஆய்வாளர் மற்றும் வருமான வரி அலுவலர்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை சீரான, காலவரையற்ற அடிப்படையில் மறுசீரமைப்பு செய்து திருத்தம் செய்யுமாறு அனைத்து, முதன்மை, தலைமை, ஆணையர்களுக்கும் உத்தரவிட வேண்டும், உயர்த்தப்பட்ட கருத்தில் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியத்தை சரியாக மறுக்கணக்கீடு செய்வதற்கும், தாமதத்திற்கான காலத்திற்கான வட்டியுடன் கூடிய தொடர்ச்சியான பாக்கித்தொகை களை வழங்குவதற்கும், அனைவருக்கும் ஒருங்கிணைந்த வழிமுறைகளை வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தள்ளதாக கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது தமிழ்நாடு வருமான வரி ஓய்வூதியர் சங்க மண்டல பொருளாளர்
இராஜேந்திர பிரசாத், மாநாடு ஒருங்கிணைப்பாளர் ரகுபதி, கமிட்டி நிர்வாகி முகமது அனு உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

