கோவையில் பாயண்ட் மீடியா சார்பாக நடைபெற்ற கண்காட்சி
![]()
கோவையில் பாயண்ட் மீடியா சார்பாக கோவை கோடிசியா வளாகத்தில், இன்டீரியோ மற்றும் எக்ஸ்டீரியோ கண்காட்சி துவக்கவிழா, வீடு கட்ட தேவையான உதிரி பாகங்கள், வீடுகளை அழகுற செய்யும் பொருட்களின் கண்காட்சி!!!
கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள பி அரங்கில், ஆகஸ்ட் 7ம் தேதியான இன்று, பாயண்ட் மீடியா சார்பாக, இன்டீரியோ மற்றும் எக்ஸ்டீரியோ கண்காட்சி நடைபெற்றது மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் வீடுகள் கட்ட தேவையான உதிரி பாகங்கள், வீடுகளை அழகுற செய்யும் இன்ட்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியோ சார்ந்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் காட்சி படுத்த பட்டுள்ளது மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய,
பாயண்ட் மீடியா நிறுவனத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி கிருஷ்ணன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹேமா சுந்தரமூர்த்தி ஆகியோர் கூறியதாவது கட்டுமானம், உள்துறை மற்றும் வெளித்துறை வடிவமைப்புத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கண்காட்சி இன்று முதல், நாளை 8ம் தேதி மற்றும் 9ம் தேதி என மூன்று நாட்கள் இங்கு, கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி மையத்தின் பி.மற்றும் சி ஆகிய அரங்குகளில் நடைபெற்று வருகின்றது என்றனர். மேலும்
17 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி, தற்போது தனது 13-வது பதிப்பை எட்டியுள்ளதாகவும்
கண்காட்சியுடன் இணைந்து கட்டுமான கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் கட்டுமானம், இன்டீரியர், எக்ஸ்டீரியர், சிவில் இன்ஜினியரிங், கட்டிட வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த உள்ளதாகவும்,
இந்த ஆண்டுக்கான கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று உள்ளது, இதில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த மூன்று நாட்களில், வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினர். மேலும் தொழில்துறையினர், கட்டிடக் கலைஞர்கள், இன்டீரியர் டிசைனர்கள், பில்டர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் இந்த கண்காட்சி அமைந்து வருகின்றது என்று தெரிவித்தார்.

