கோவை நவ இந்தியா பகுதியில் நடைபெற்ற விழா
![]()
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பெருமை படுத்த பட்டது.
மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மற்றும் கொங்குநாடு அறக்கட்டளையின் சார்பாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பரிசளிக்கும் பத்தாம் ஆண்டு விழா, நிகழ்ச்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது இதில், மாநில கொங்கு வேளாலர் கவுண்டர்கள் அறக்கட்டளை தலைவர் கொங்கு தேவராஜ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் எஸ்.பி ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். முனைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார். சிரவை ஆதீனம் குருமகா சன்னிதானம் தவத்திரு முனைவர் குருபர சுவாமிகள் மற்றும் சமத்துவ ஆன்மீகச் செம்மல் அப்பர் அப்பரடிப்பொடி சொக்கலிங்கனார் நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம், நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்பி அன்பரசன், இந்துஸ்தான் கல்வி குழுமம் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், விவேகம் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் ஆர் சுப்பிரமணியம், பிரகதி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி பாலசுப்பிரமணியம், ஆகியோர் குழந்தைகள் மத்தியில் சிறப்பு உரையாற்றினர் அதனை தொடர்ந்து, சுமார் 750 குழந்தைகளுக்கு மேல் பரிசுகளும், கோவையில் சிறந்து விளங்குகின்ற கல்லூரி மருத்துவமனை மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு சாதனையாளர் விருதும், சரஸ்வதி கண்ணையனுக்கு கலைவாணி தாய் விருதும், விவேகம் உயர்நிலைப் பள்ளி சுப்பிரமணியனுக்கு கல்வி நெறி காவலர் விருதும், பிரகதி மருத்துவமனையினுடைய நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி பாலசுப்பிரமணியம் மனித நேயம் மாமனி விருதுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் இன் போஸில் பிரபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சித்தாபுதூர் செந்தில், மாணவர் அணி செயலாளர் மதன், மற்றும் கார்த்தி ஹரி மகளிரணியினர் கௌரி செல்வி வடிவு இந்திராணி கவுசிகா தேவி மற்றும் கொங்கு பேரவையினுடைய நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

