கோவையில் நடைபெற்ற கோவில் விழா

Loading

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில், 24 மனை, தெலுங்கு செட்டியார், சொப்பியர் வகுப்பினர் குலதெய்வ திருக்கோவிலானகன்னிமார் அம்மன் கோவிலில் ஆடி 18 சிறப்பு பூஜைகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில், கன்னிமார் அம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த திருக்கோவில்,
24 மனை, தெலுங்கு செட்டியார் சொப்பியர் வகுப்பினர் குலதெய்வ திருக்கோவிலாக அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் 2023 ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இத்திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்யும், இச்சமூக மக்கள், ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதியில் மட்டும் சிறப்பு வழிபாடு, அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு விஷேச பூஜைகள் செய்வது வழக்கம் இந்த நிலையில் இன்று ஆடி 18ஐ முன்னிட்டு, காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கிய சிறப்பு வழிபாடுகள், யாக வேள்விகள் நடத்தி, ஒதுவாச்சாரியர்கள் வேத மத்திரங்கள் ஓதி, அம்மனுக்கு பால், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி, சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. இதனை தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கி கொண்டாட பட்டது. இந்த சிறப்பு பூஜை வழிபாட்டு நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தலைவர் அமிர்த லிங்கம், செயளாலர் பாலு, பொருளாளர் பிரகாஷ், துணை செயலாளர் கண்ணையன், துணை பொருளாளர் மகேந்திர பாபு, கெளரவ ஆலோசகர் தாமோதரன், உள்ளிட்டோர் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares