கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில், திருவள்ளூவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கன்டன ஆர்பாட்டம்! தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களாக முன்வைத்தனர்.
திருவள்ளூவர் பல்கலைக்கழக ஆய்வகத்தில், கடந்த ஜூலை 24ம் தேதி, பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும், திருவள்ளுவர் பல்கலைக்கழக உள்ளக விசாரணை குழுவிற்க்கு, தற்போது உள்ள, தலைமையை மாற்றம் செய்ய வேண்டும் எனவும், 2012ம் ஆண்டு முதல் திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட பாலியல் புகார்களை, இன்று வரை மோசடியாக முடித்து வைத்து வரும், தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அலுவலர், முனைவர் பாபு ஜனார்த்தனன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருமணமான சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண் கொடுத்த புகாரின், மீதான விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட புகாரின் மேல்விசாரணையை முழுமையாக செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, 2013 ஆம் வருடத்திய பாலியல் சீண்டல் குறித்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை நடவடிக்கை எடுக்காத திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து, கோவை மருதமலை பகுதியில், உள்ள பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் நடத்தும் மாபேரும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க செயலாளர் ரமேஷ் கூறியதாவது.. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு பாலியல் சீண்டல்களில், ஈடுபட்டு வருபவர்கள் மீது உரிய விசாரணை நடத்தாமல், பாலியல் சீன்டலுக்கு ஆளாகும் நபர்களை தப்பிக்க வைக்கும் வகையில் தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அலுவலர் செயல்பட்டு வருகின்றார், இவர் மீதும் இப் பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபர்கள் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார், இந்த பேட்டியின் பொழுது பாரதியார் பல்கலைக்கழக தொழிற்சங்க தலைவர் சாந்தாமணி உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares