கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழக்கறிஞர் மனு
![]()
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் குவியும் பொதுமக்கள் கூட்டத்தை குறைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக மனு.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் கோவை சிவாஜி காலனி பகுதியில் அமைந்துள்ளது. இதன் மாநில துணைத்தலைவராக வழக்கறிஞர் புஷ்பானந்தம் இருந்து வருகிறார். இவரது தலைமையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டது. அந்த மனுவில் தமிழகம் முழுவதும், ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகாமில், வரிசையில், நின்று பொதுமக்களின், மனுவை, கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அதன்பின் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம், மனுக்களையும் நேரடியாக கொடுக்க லாம், மனு கொடுத்தவுடன் மாவட்ட ஆட்சியர் அவருக்கு கீழ் உள்ள உயர் அதிகாரிகளுக்கு, அந்த மனு, குறித்த உத்தரவை வழங்குவார். இதில், துணை ஆட்சியர்கள், துணை ஆணையர்கள், மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர், குறிப்பாக மாவட்ட துறையின் உயரதிகாரிகள், அனைத்து தாசில்தார்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்கள் மனு கொடுத்தவுடன் அவர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்பட்டு வருகின்றது. மனு கொடுத்த அன்றே மனுவில் குறிப்பிட்டப்பட்டுள்ள செல் எண்ணிற்கு மனு அளிக்க பட்டுள்ளதாப குறுஞ்செய்தி வருகின்றது. ஆனால் மனு கொடுத்த, சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து, எந்த பதிலும் வருவதில்லை. எனது அமைப்பு மற்றும் கட்சியின், சார்பாக பல்வேறு மனுக்களை, ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள், குறைதீர்க்கும் முகாமில் கொடுத்து வருகிறோம், மனு வழங்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வருகின்றது. ஆனால் பதில் கடிதம் முறையாக வருவதில்லை, குறிப்பாக குறைதீர்க்கும் முகாமில், அந்தந்த அரசு துறை உயர் அதிகாரிகள் மனு முகாமிற்கு வருவதில்லை, குறிப்பாக தாசில்தார் அலுவலக மனு என்றால், தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் வருவதில்லை, பார்மாலிட்டிக்காக தாலுகா அலுவலகத்தில் இருந்து ஒரு சாதாரண ஆபீஸ் கிளார்க் குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொள்கிறார். இதனால் பொதுமக்களின் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக சாக்கடை வசதி, குடிநீர் வசதி, ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்று, மின்சார வசதி, அரசு லோன் கேட்டு மனு, இருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு மனு, வேலை கேட்டு மனு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு, என பல்வேறு மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை நாட்களில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் மாவட்ட ஆட்சியரை திங்கட்கிழமை நாட்களில் சந்திக்க முடியாத அளவிற்கு பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் குவிந்து வருகின்றது, எனவே பொதுமக்கள் குறைகளை அந்தந்த துறைகளின் கீழ் உள்ள உயர் அதிகாரிகள், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மற்றும் மனு கொடுக்க வரும் பொது மக்களின் கூட்டம் குறையும், அதிகாரிகள் பொதுமக்கள் மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்காததினால் மட்டுமே மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க பொதுமக்கள் வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளை அவர்களது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து சம்பத்தப்பட்ட மனுக்களை பெற்று உடனடியாக அவற்றிற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

