நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 2000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
![]()
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 2000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்: 19-வது மாதமாக தொடரும் ஆன்மீகச் சேவை!
ஈரோடு:
ஈரோடு தாளவாடி தலைமை தொட்டபுரம் ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து, கடந்த இரண்டு வருடமாக தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 19-வது மாதமாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக, ஆஞ்சநேயர் படத்திற்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் செயலாளர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நேதாஜி காய்கறி மார்க்கெட் கடை உரிமையாளர்கள், விவசாயிகள், கோவில் அறங்காவலர்கள், அன்னதான கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியோர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கூடுதல் இடங்களிலும் அன்னதானம்:
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சார்பாக ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியிலும் சுமார் 700 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், தலமலை ஆஞ்சநேயர் திருக்கோவிலிலும் அறக்கட்டளை சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

