அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலக தீபா மீது புகார்
![]()
அரக்கோணம் மக்களைஅலைக்கழிக்கும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!. மாவட்ட ஆட்சியரிடம் AIJMNP தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி புகார் மனு
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நகர நில அளவையர் (Town Surveyor) திருமதி தீபா அவர்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்டுவரும் புகார்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய ஜனநாயக மக்கள் நல பேரவை (AIJMNP) நிறுவனரும் தேசியத் தலைவருமான டாக்டர் ஆ. ஹென்றி புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், பட்டா மாறுதல், FMB வரைபடங்கள் மற்றும் நில அளவை தொடர்பான பணிகளுக்காக அலுவலகம் வரும் பொதுமக்கள் நீண்டகால தாமதம் மற்றும் சிரமங்களை எதிர்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பலமுறை அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்படுவது வேதனையளிப்பதாகவும், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிர்வாகம் மக்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவையை வழங்குவது அடிப்படை கடமை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டர் ஆ. ஹென்றி கூறுகையில்,
“பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசு அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் பல துறைகளில் பணித்தாமதம், அலுவலக வருகை குறைபாடுகள், கோப்புகள் தேக்கம் போன்ற காரணங்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அரசு அலுவலர்கள் அனைவரும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெறுகின்றனர். எனவே ஒவ்வொரு பொதுமக்களும் உரிய நேரத்தில் அரசின் சேவைகளைப் பெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
மேலும், மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு சேவை வழங்காத அல்லது அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்பி, தகுதியும் அனுபவமும் கொண்ட அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான சேவை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் எதிர்பார்த்து வருகின்றனர்

