நீட்தேர்வுக்கானஉண்டுஉறைவிடஇலவசபயிற்சிநிறைவு

Loading

பட்டாபிராம் அரசு மாதிரி பள்ளியில் நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சியில் தேர்வு எழுதவுள்ள 56 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நுழைவுச் சீட்டுகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :

திருவள்ளூர் மே 05 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் மாவட்டம் நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தேர்வு எழுதவுள்ள 56 மாணவ, மாணவியர்களை வாழ்த்தி தேர்வு நுழைவுச் சீட்டுகளை வழங்கி, அரசுப் பள்ளி மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்த உண்டு உறைவிட கோடைக்கால சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில் நீட் தேர்வுக்கான சிறப்பு உண்டு உறைவிட பயிற்சி வகுப்பு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட 50 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு. ஆவடி பகுதியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனம் வாயிலாக தரமான நீட் பயிற்சி வழங்கப்பட்டது.
மாணவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பான குடியிருப்பு வசதி மற்றும் சத்தான உணவு வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மாணவர்கள் சீரான மற்றும் ஒழுங்கு முறையான சூழலில் தங்கி பயில தேவையான அனைத்து வசதிகளும் உறுதிசெய்யப்பட்டது. மாணவர்களின் கல்வி முன்னேற்றம் உடல்நலம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் மற்றும் கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் முன்னேற வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான  உண்டு உறைவிட கோடைகால சிறப்பு முகாம் – திருவள்ளூர் மாவட்ட சிறப்பு முன்னெடுப்பாக அரசுப் பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்த உண்டு உறைவிட கோடைக்கா சிறப்பு முகாம் 01.05.2026 முதல் 15.05.2026 வரை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டத்தின் கீழ், பெற்றோர்களின் விருப்பம் தெரிவித்தன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அரசு மாதிரிப் பள்ளியில் கோடைக்கால சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாணவர்களுக்கு கணினி சார்ந்த வகுப்புகள், கைவினைப் பொருட்கள், நடனம், கால்பந்து, சதுரங்கம், சிலம்பாட்டம், யோகா, வில் அம்பு பயிற்சி, புகைப்படம் மற்றும் காணொளி செய்முறை, பேக்கரி, ஒரு நாள் சுற்றுலா போன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதி மற்றும் சத்தான உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாடவியல் நிபுணர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இணைந்து பயிற்சி மையம் மற்றும் தங்கும் இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ.கற்பகம்,மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) (பொ) லிங்கேஷ்வரன், மாவட்ட கல்வி அலுவலர் (பொன்னேரி) (பொ) ஐயப்பன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) (பொ) பன்னீர்செல்வம், அரசு மாதிரி பள்ளி; தலைமையாசிரியர் லலிதா, தனியார் பயிற்சி நிறுவன பயிற்றுநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares