100சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
![]()
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
திருவள்ளூர் மார்ச் 26 : திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது அதன்படி எரிவாயு விநியோகிக்கும் வாகனங்கள் மற்றும் உருளைகளில் (கேஸ் சிலிண்டர்) மாவட்ட தேர்தல் அலுவலர் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் இந்தியன் வங்கியில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின், இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அதனைத் தொடர்ந்து சட்டமன்ற பொது தேர்தல்-2026 யை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு 18,000-க்கும் அதிகமான சுவர் விளம்பரங்கள், பொது இடங்களில் இருக்கும் அரசியல் சார்ந்த பதாகைகள், விளம்பரங்கள் அனைத்தும் அகற்றும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரைக்கும் ரூ.3 கோடிக்கு அதிகமாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சோதனை சாவடிகள் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது அதன்படி திருத்தணி சட்டமன்ற தொகுதியில் ரூ.18 லட்சம் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா இதுவரைக்கும் கைப்பற்றப்பட்டுள்ளது. மாவட்டத் தில் 260 பதற்றமான வாக்குச்சாவடிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இடர்பாடுகள் உள்ள பதற்றமான தரமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், உதவி இயக்குநர் (பயிற்சி) பி.மோகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தென்னரசு, இந்தியன் வங்கி மேலாளர், பணியாளர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

