தமிழ்நாட்டில் அனைத்து சார் பதிவகத்தில்28.03.2026 சனிக்கிழமைபதிவு செய்ய கோரிக்கை
![]()
தமிழ்நாட்டில் அனைத்து சார் பதிவகத்தில்28.03.2026 சனிக்கிழமைபதிவு செய்ய கோரிக்கை
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி 28.03.2026 சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட ஆவண செய்யக் கோரி எழுதியுள்ள கடிதத்தில்..
எதிர்வரும் 26.03.2026 வியாழன் மற்றும் 27.03.2026 வெள்ளிக்கிழமை அஷ்டமி மற்றும் நவமி என்பதால் இந்த இரு நாட்களிலும் பெரும்பான்மையான மக்கள் சுப காரியங்கள் தொடங்குவதை தவிர்த்து விடுவார்கள். உதாரணமாக மேற்கண்ட தினங்களில் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் தங்களது சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்ப மாட்டார்கள். எனவே தமிழ்நாட்டில் பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் மிக சொற்ப அளவில் நடைபெறுவது வழக்கம். இதனால் பதிவுத் துறையின் வாயிலாக அரசுக்கு வர வேண்டிய வருவாயும் பெருமளவில் தடைப்படும். மேலும் 2025-26-ஆம் நிதி ஆண்டு வருகிற மார்ச் 31.03.2026 ஆம் தேதி முடிவடைவதால் அதிக அளவில் பத்திர பதிவுகள் நடைபெற கூடுதல் வாய்ப்புள்ளது.
ஆகவே பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்கண்டவைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு எதிர்வரும் 28.03.2026 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளும் வகையில் உரிய ஆவண செய்வதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் தங்களது சொத்துக்களை பதிவு செய்து மகிழ்வுறுவதுடன், மேற்கண்ட தினங்களில் அரசுக்கு வராமல் தடைப்பட்ட வருவாயையும் ஈடு செய்யும் வகையில் பயனுள்ளதாக அமையுமென பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி பதிவுத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

