3-வது முறையாக போட்டியிட வாய்ப்பு வேண்டிஅன்னதானம்
![]()
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட வாய்ப்பு வேண்டி வீரராகவர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கிய திமுக எம்எல்ஏ.,
திருவள்ளூர் மார்ச் 20 : திருவள்ளூர் சட்டமன்ற திமுக உறுப்பினராக இருப்பவர் வி.ஜி.ராஜேந்திரன். இந்நிலையில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இளைஞர்கள் அதிகளவில் விருப்ப மனு தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 3-வது முறை வெற்றி பெற்றால் அமைச்சர் ஆக வாய்ப்பு இருப்பதால் கட்சி நிர்வாகிகள் பலரும் இவருக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், திருவள்ளூர் தொகுதியில் பொது மக்களிடம் போதிய அணுகுமுறை இல்லாததால் இந்த முறை வி.ஜி.ராஜேந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்குமா… கிடைக்காதா என திமுகவினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் அமாவாசை தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த வி.ஜி.ராஜேந்திரன் இந்த முறை மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி பிரார்த்தனையை நிறைவேற்றினார்.

