தேர்தல் புகார்களை கைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை கைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் மார்ச் 20 : திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை கைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏதுவாக மையம் அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊரக பகுதிகளில் தனியார் கட்டடங்களில் அனுமதி பெறாமல் செய்யப்பட்ட சுவர் விளம்பரங்கள், மாநகரம், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சுவர் விளம்பரம், வாக்காளர்களை கவரும் வகையில் பொருள்கள் பணம், மது வகைகள் விநியோகம் செய்தல் மற்றும் ஆயுதம் கொண்டு மிரட்டுதல், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்வது, தேர்தல் செலவின புகார்களை தெரிவிக்க ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி புகார்களை இலவச தொலைபேசி எண் :1800 425 8515 மற்றும் 7305158550 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், மேற்படி புகார்களை பொதுமக்கள் ஸ்ரீ}யஐஎஐக என்ற கைபேசி செயலியின் மூலமாகவும் தெரிவிக்கலாம். திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குள்பட்ட 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களிலும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கும்மிடிப்பூண்டி- 7200133851, ஆவடி – 8925902432, பொன்னேரி (தனி)} 9150799790, மதுரவாயல் – 9384094022, திருத்தணி – 8838425195, அம்பத்தூர் – 9499956212, திருவள்ளூர் -9445900494 009.மாதவரம் 9003595898 பூந்தமல்லி(தனி) 9789254821, திருவொற்றியூர் – 9445190201 தொடர்ந்து கொண்டு தெரிவிக்கலாம்.மேலும் தேர்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படையினர் மற்றும் மூன்று நிலை கண்காணிப்பு குழுவினர் 8 மணி நேர சுழற்சி முறையில் 18 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெறும் புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதியின் பறக்கும் படையினர் குழுவுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares