அரக்கோணம் நிரந்தர சார் பதிவாளர் நியமனம்-நன்றி
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு அரக்கோணம் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர சார் பதிவாளரை விரைந்து நியமனம் செய்தமைக்கு நன்றி பாராட்டி எழுதியுள்ள கடிதத்தில்..
தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முக்கியமான சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒன்றான அரக்கோணம் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் நாளொன்றுக்கு குறைந்தது 200 டோக்கன் வரை வழங்கப்பட்டு ஆவண பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், நிரந்தர சார் பதிவாளர் நியமிக்கப்படாததின் காரணமாக பதிவு பணிகளை மேற்கொள்ளும் போது போதிய பதிவு சட்ட திட்டங்கள் குறித்து அனுபவம் இல்லாத உதவியாளர்களே கையாண்டு வந்ததினால் பதிவு பணிகள் பெரும் தாமதமாக நடைபெற்று வந்ததுடன், பல காரணங்களை காட்டி ஆவணங்களை பதிவு செய்ய மறுக்கும் அவல நிலையிருந்தது. இதனால் பொதுமக்கள். முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் தங்களது ஆவணங்களை பதிவு செய்ய இயலாமல் வீண் அலைச்சல் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வந்ததுடன், அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் தடைபடும் சூழல் நிலவி வந்தது.
மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அரக்கோணம் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உடனடியாக பதிவு சட்டம் நன்கறிந்த, அனுபவமிக்க நிரந்தர சார் பதிவாளரை நியமிக்க கோரி பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு பெயிரா கூட்டமைப்பின் சார்பாக (FAIRA கடித எண். 138 / 2025. தேதி:27.11.2025 மற்றும் FAIRA கடித எண். 129/2025, தேதி: 25.09.2025) கடிதங்கள் எழுதியிருந்தோம்.
பதிவுத்துறை தலைவர் அவர்கள் பெயிரா கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து பொது மக்களின் நலன் கருதி அரக்கோணம் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுபவமிக்க நிரந்தர சார் பதிவாளரை விரைந்து நியமனம் செய்து மேற்கண்ட பிரச்சனைக்கு தீர்வு கண்டமைக்கு எமது உளமார்ந்த பாராட்டுகளையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கவதாக டாக்டர்.ஆ.ஹென்றி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்

