ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில்அன்னதானம் 

Loading

ஈரோடு
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 15-வது மாதமாக 1500 க்கும் மேற்பட்டோருக்கு   அன்னதானம் 
ஈரோடு தாளவாடி தலைமலை தொட்டபுரம் ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து, கடந்த இரண்டு வருடமாக  தங்களது சேவையைத் தொடர்ந்துள்ளனர்.  ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 15-வது மாதமாகச் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு  முன்னிலை ஓசை பெரியசாமி தக்காளி மண்டி, சிறப்பு அழைப்பாளர்கள் சந்தானமூர்த்தி ஸ்ரீ சிட் பண்ட்ஸ் உரிமையாளர், கணபதி பைப்ஸ் உரிமையாளர் மோகன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் அன்னதான கமிட்டியின் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டு 1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்,  முதியோர்களுக்கு உணவை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சார்பாக ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியிலும் சுமார் 600 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

One attachment  •  Scanned by Gmail

0Shares