கோவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
![]()
கோவை
இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி, வேலை வாய்ப்பை உருவாக்க இலவச தொழிற்கல்வி மையத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதன்மூலமாக கிராமபுற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எஸ்.கே.பி சுனந்தா ராம்மோகன் திறன் எனும், மையம் உடுமலைப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் 18 முதல் 27 வயதுக்குள் உள்ள, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவான இளைஞர்களுக்கு இலவச தொழிற்கல்வி வழங்குகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் வேலை பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகளை, 45 முதல் 90 நாட்கள் வரை வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சிகளுக்காக மாணவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த முயற்சி, கரூரில் பிறந்து, அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் டாக்டர் எம். ராம்மோகன், மகாலட்சுமி, முத்துராமலிங்கம் அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பரிந்துரையின் பேரில், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழகத் தலைவர் டாக்டர். வி.ஜி. மோகன் பிரசாத் மற்றும் அதன் உறுப்பினர்கள், அறங்காவலர்களின் ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் குறித்து கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையில் டாக்டர், மோகன் பிரசாத் கூறியதாவது..
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழக தலைவராக தான் இருந்து வருகின்றேன் இதனை தொடர்ந்து உடுமலைப்பேட்டையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை துவங்கி உள்ளதாகவும், இம்மையம் மூலமாக, தொழிற்கல்வி பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் நிலையான வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்த திறன் மையம் கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என்றார். இந்த நிகழ்ச்சியில், அண்ணா யுனிவர்சிட்டியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ராவ், ரோட்டேரியன் சாய்ராம், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழகத்தின் துணை செயலாளர் கோபாலன், பொள்ளாச்சி ஐ.டி. நிபுணர் ராமலிங்கம், வினோத், பாலா மற்றும் கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

